தனஞ்செய டி சில்வா அசத்தல் சதம்: இலங்கை முதல் இன்னிங்சில் 308 ரன்களுக்கு ஆல் அவுட்

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜஸ்டின் கிரீவ்ஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.
dhananjaya de silva
Published on

இலங்கை அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

ஒருநாள் தொடரை 1-0 என இலங்கையும், டி20 தொடரை 2-1 என வெஸ்ட் இண்டீசும் வென்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆண்டிகுவாவில் நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, இலங்கை அணி முதலில் களமிறங்கியது. தினேஷ் சண்டிமால் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 54 ரன்னில் வெளியேறினார். சோனல் தினூஷா 43 ரன்னில் அவுட்டானார்.

ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் தனஜ்செய டி சில்வா நிதானமாக ஆடினார். சிறப்பாக ஆடி சதமடித்து அசத்திய அவர் 120 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், இலங்கை அணி 71.5 ஓவரில் 308 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜஸ்டின் கிரீவ்ஸ் 3 விக்கெட்டும், கீமர் ரோச், அல்ஜாரி ஜோசப், ஷமார் ஜோசப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com