ராவல்பிண்டி டெஸ்ட்: இலங்கை அணி முதல் இன்னிங்சில் 446 ரன்களுக்கு ஆல் அவுட்

இலங்கை அணியின் தனஞ்செய டி சில்வா 167 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.
saqib khan
Published on: 

பாகிஸ்தானுக்கு எதிரான ராவல்பிண்டி டெஸ்டில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 446 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

பாகிஸ்தான்- இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 439 ரன் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.

5 வீரர்கள் அரைசதம்

சவுத் ஷகீல் 93 ரன்னும், தய்யாப் ஆரிப் 57 ரன்னும், அராபத் மினாஸ் 52 ரன்னும், முகமது தாஹா 51 ரன்னும், பாபர் அசாம் 50 ரன்னும் எடுத்தனர்.

இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ, தில்ஷன் மதுஷனகா 3 விக்கெட் வீழ்த்தினர்.

தனஞ்செய டி சில்வா, குசால் மெண்டிஸ் சதம்

இதையடுத்து, இலங்கை அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. மூன்றாம் நாள் முடிவில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்கு 404 ரன்கள் எடுத்தது. தனஞ்செய டி சில்வா 167 ரன்னும், குசால் மெண்டிஸ் 117 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்நிலையில், நான்காம் நாளான இன்று மேற்கொண்டு ரன் சேர்க்காமல் தனஞ்செய டி சில்வா 167 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 119 ரன்னிலும் வெளியேறினர்.

5வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி இதுவரை 249 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. அடுத்து வந்த வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

இறுதியில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 446 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

சாகிப் கான் 7 விக்கெட்

பாகிஸ்தான் சார்பில் சாகிப் கான் 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். மொகமது அப்பாஸ் 2 விக்கெட் வீழ்த்தினார்.

X