6 வீரர்கள் அரை சதம் அடித்து அசத்தல்: இலங்கை முதல் இன்னிங்சில் 531 ரன்கள் குவிப்பு

முதலில் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 531 ரன்கள் குவித்தது. இலங்கை அணியில் தொடக்க வீரர்கள் உள்பட 6 பேர் அரை சதமடித்தனர்.
6 வீரர்கள் அரை சதம் அடித்து அசத்தல்: இலங்கை முதல் இன்னிங்சில் 531 ரன்கள் குவிப்பு
Published on

சட்டோகிராம்:

வங்காளதேசம், இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் சட்டோகிராமில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 531 ரன்கள் குவித்தது.

அந்த அணியின் குசால் மெண்டிஸ் 93 ரன்னும், கமிந்து மெண்டிஸ் 92 ரன்னும், கருணரத்னே 86 ரன்னும், தனஞ்செய டி சில்வா 70 ரன்னும், சண்டிமால் 59 ரன்னும், நிஷான் மதுஷ்கா 57 ரன்னும் எடுத்தனர்.

வங்காளதேசத்தின் ஷகிப் அல் ஹசன் 3 விக்கெட்டும், ஹசன் மெஹ்மூத் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதையடுத்து, வங்காளதேசம் முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com