

பாகிஸ்தானுக்கு எதிரான ராவல்பிண்டி டெஸ்டில் தனஞ்செய டி சில்வா, குசால் மெண்டிஸ் ஆகியோர் சதமடித்து அசத்த மூன்றாம் நாள் முடிவில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 404 ரன்கள் குவித்துள்ளது.
பாகிஸ்தான்- இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 439 ரன் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.
சவுத் ஷகீல் 93 ரன்னும், தய்யாப் ஆரிப் 57 ரன்னும், அராபத் மினாஸ் 52 ரன்னும், முகமது தாஹா 51 ரன்னும், பாபர் அசாம் 50 ரன்னும் எடுத்தனர்.
இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ, தில்ஷன் மதுஷனகா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, இலங்கை அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. இரண்டாம் நாள் முடிவில் இலங்கை அணி 3 விக்கெட்டுக்கு 114 ரன்கள் எடுத்தது. கமிந்து மெண்டிஸ் 40 ரன்னும், தனஞ்செய டி சில்வா 22 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்நிலையில், மூன்றாம் நாளான இன்று சிறப்பாக ஆடிய கமிந்து மெண்டிஸ் அரை சதம் கடந்து 58 ரன்னில் அவுட்டானார்.
4வது விக்கெட்டுக்கு கமிந்து மெண்டிஸ்-தனஞ்செய டி சில்வா ஜோடி 90 ரன்கள் சேர்த்தது.
அடுத்து, தனஞ்செய டி சில்வாவுடன் குசால் மெண்டிஸ் இணைந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. இந்த ஜோடியைப் பிரிக்க பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் திணறினர்.
பொறுப்புடன் ஆடிய தனஞ்செய டி சில்வா சதமடித்து அசத்தினார். அவரைத் தொடர்ந்து குசால் மெண்டிஸ் சதமடித்தார்.
5வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி இதுவரை 249 ரன்கள் சேர்த்துள்ளது.
இறுதியில், மூன்றாம் நாள் முடிவில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்கு 404 ரன்கள் எடுத்துள்ளது. தனஞ்செய டி சில்வா 167 ரன்னும், குசால் மெண்டிஸ் 117 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
பாகிஸ்தான் சார்பில் மொகமது அப்பாஸ், சாகிப் கான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.