

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 5 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.
இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் இன்று தொடங்கியது.
இந்தப் போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, இலங்கை அணி முதலில் களமிறங்கியது. தொடக்கம் முதலே இலங்கை வீரர்கள் ரன் சேர்க்கத் திணறினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.
இலங்கை அணி 17.1 ஓவரில் 36 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
பாகிஸ்தான் சார்பில் மொகமது அப்பாஸ், ரசாவுல்லா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.