இந்தியா அபார பந்துவீச்சு: முதல் இன்னிங்சில் பாலோ ஆனை தவிர்க்குமா இலங்கை?

இந்திய அணி முதல் இன்னிங்சில் 503 ரன்கள் குவித்தது.
team india
Published on

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இலங்கை அணி பாலோ ஆனை தவிர்க்கப் போராடி வருகிறது.

இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 15-ம் தேதி நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

கடைசி டெஸ்ட்

இந்தியா, இலங்கை இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்புவில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. சரண்ஷ் ஜெயின் அறிமுகம் ஆனார்.

இந்திய அணி ரன் குவிப்பு

அதன்படி, இந்திய ஆடிய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 503 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தேவ்தத் படிக்கல் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர்117 ரன்னில் வெளியேறினார். துருவ் ஜூரல் அபாரமாக ஆடி சதமடித்துஅசத்தினார். அவர் 115 ரன்னில் வெளியேறினார்.

ரிஷப் பண்ட் 63 ரன்னும், சுப்மன் கில் 50 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஜெய்ஸ்வால் 45 ரன்னிலும், ஜடேஜா 43 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்

இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், பிரபாத் ஜெயசூர்யா, கேஷரா நுவாந்தா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, இலங்கை அணி முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது. உணவு இடைவேளை கடந்து42 ஓவர் வரை அந்த அணி 5 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்துள்ளது.

முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. கமிந்து மெண்டிஸ் 32 ரன் எடுத்தார். பசிந்து சூர்யபந்தாரா அரை சதம் கடந்து ஆடி வருகிறார்.

இன்னமும் கைவசம் 5 விக்கெட் உள்ள நிலையில் இலங்கை அணி பாலோ ஆனில் இருந்து தவிர்க்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com