

இந்த முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் முன்னாள் கேப்டனான சரித் அசலங்காவுக்கு இடம் கிடைக்கவில்லை. இவர் சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடினார். 3 போட்டிகளில் முறையே 1, 11 மற்றும் 7 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.
பதுன் நிசாங்கா அணியில் இடம் பிடித்துள்ளார். ஆனால், உடற்தகுதி சான்று பெற்றால்தான் களம் இறங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 வயதான சஹன் அராச்சிகே, அபிஷ்கா பெர்னாண்டோ ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குசால் மெண்டிஸ் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), அவிஷ்கா பெர்னாண்டோ, கமில் மிஷாரா, பவன் ரத்னயகே, சஹன் அராச்சிகே, கமிந்து மெண்டிஸ், ஜனித லியநாகே, தசுன் ஷனகா, துனித்து வெல்லாலகே, மஹீஷ் தீக்ஷனா, சச்சிந்து கொலம்பேஜ், துஷ்மந்தா சமீரா, அசிதா பெர்னாண்டோ, தில்ஷன் மதுஷங்கா, ஈஷன் மலிங்கா, பதுன் நிஷாங்கா.
இலங்கை அணி பாகிஸ்தானை ராவல்பிண்டியில் 18-ந்தேதியும், இங்கிலாந்தை 22-ந்தேதியும் எதிர்கொள்கிறது. அதன்பின் பாகிஸ்தானை 27-ந்தேதி கடாபியிலும், இங்கிலாந்தை அக்டோபர் 29-ந்தேதியிலும் எதிர்கொள்கிறது.