டி20 போட்டிகளில் அதிக வெற்றி: உலக சாதனை படைத்த ஸ்பெயின் அணி

ஸ்பெயின் அணி தொடர்ந்து 14 டி20 போட்டிகளில் வெற்றிகளை பதிவுசெய்தது. இந்தப் பட்டியலில் இந்திய அணி 3- வது இடத்தில் உள்ளது.
டி20 போட்டிகளில் அதிக வெற்றி: உலக சாதனை படைத்த ஸ்பெயின் அணி
Published on

துபாய்:

ஐ.சி.சி. நடத்தும் டி20 உலகக் கோப்பை வரும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்தத் தொடருக்கான ஐரோப்பிய பிராந்திய தகுதிச் சுற்று ஆட்டங்கள் தற்போது நடந்து வருகின்றன.

இதில் ஸ்பெயின் கிரிக்கெட் அணி 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளுடன் (ஒரு போட்டி முடிவு இல்லை) குரூப் சி பிரிவில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதில் கிரீஸ் அணியை வென்றதன் மூலம் ஸ்பெயின் அணி தொடர்ந்து 14 டி20 போட்டிகளில் வெற்றிகளை பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், இந்த வெற்றியின் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகள் பெற்ற அணி என்ற புதிய உலக சாதனையை ஸ்பெயின் அணி படைத்துள்ளது.

இந்தப் பட்டியலில் இந்திய அணி 12 வெற்றிகளுடன் ஆப்கானிஸ்தான் மற்றும் ருமேனியா அணியுடன் 3-வது இடம் பிடித்துள்ளது.

மேலும், மலேசியா மற்றும் பெர்முடா ஆகிய அணிகள் 13 வெற்றிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com