புதிய அவதாரம் எடுத்த தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா

10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந் தேதி தொடங்குகிறது.இந்த தொடருக்கான வர்ணனையாளர் குழு பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
புதிய அவதாரம் எடுத்த தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா
Published on

20 அணிகள் பங்கேற்கும் 10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன.

இந்த தொடரில் பங்கேற்பதற்காக அனைத்து அணி வீரர்களும் இந்தியா மற்றும் இலங்கைக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு பயிற்சி போட்டிகளும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த தொடருக்கான வர்ணனையாளர் குழு பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. வர்ணனையாளர் (Commentator) குழுவில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் தற்போதைய டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளின் கேப்டனான டெம்பா பவுமா இணைந்துள்ளார்.

டி20 தொடருக்கான வர்ணனையாளர் குழு பட்டியல்:-

ரவி சாஸ்திரி, நாசர் ஹுசைன், இயன் ஸ்மித், இயன் பிஷப், ஃபின்ச், கார்த்திக், சங்கக்கார, பத்ரீ, உத்தப்பா, பிராத்வைட், மோர்கன், வசிம் அக்ரம், கவாஸ்கர், ஹைடன், ரமீஸ் ராஜா, ஸ்டெய்ன், அதர்டன், வக்கார், சைமன் டவுல், பொல்லாக், கேட்டி மார்ட்டின், ஹர்ஷா, மும்பெலோ மபாங்வா, நடாலி ஜெர்மானோஸ், டேனி மோரிசன், ஆலன் வில்கின்ஸ், இயன் வார்டு, மார்க் ஹோவர்ட், நிக் நைட், அதர் அலி கான், காஸ் நைடூ, பாசித் கான், ரவுனக் கபூர், நயால் ஓ'பிரையன், பிரஸ்டன் மாம்சென், ஆண்ட்ரூ லியோனார்ட், ரஸ்ஸல் அர்னால்ட், ரோஷன் அபேசிங்க, ஏஞ்சலோ மேத்யூஸ், பவுமா.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com