ரோசோவ் அதிரடி சதம்: வங்காள தேச அணிக்கு 206 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா

டி காக் 38 பந்துகளில் 63 ரன்கள் அடித்தார்.டி20 கிரிக்கெட்டில் ரோசோவ் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார்.
சதம் அடித்த தென் ஆப்பிரிக்கா வீரர்
சதம் அடித்த தென் ஆப்பிரிக்கா வீரர்
Published on

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று தென் ஆப்பிரிக்கா - வங்காள தேசம் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரரான பவுமா 2 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து டி காக் - ரோசோவ் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். டி காக் 38 பந்துகளில் 63 ரன் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். தொடர்ந்து அதிரடி காட்டிய ரோசோவ் தென் ஆப்பிரிக்காவுக்காக தனது 2-வது சதத்தை பதிவு செய்தார்.

அவர் 109 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதில் 8 சிக்சர் 7 பவுண்டரிகள் அடங்கும். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 205 ரன்கள் எடுத்தது.

206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வங்களாதேசம் அணி களமிறங்குகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com