முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வேயை 43 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா

நமீபியா, ஜிம்பாப்வே அணிகள் தலா ஒரு வெற்றி பெற்று 2 புள்ளிகள் பெற்றுள்ளன.
pretorius
Published on
Summary

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடர் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி எளிதில் வெற்றி பெற்றது.

நமீபியா, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 28-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

முதல் லீக் போட்டியில் பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்காவை நமீபியாவும், 2வது லீக் போட்டியில் ஜிம்பாப்வே அணியை தென் ஆப்பிரிக்காவும் வீழ்த்தியது. 3-வது லீக் ஆட்டத்தில் நமீபியாவை ஜிம்பாப்வே அணியும் வீழ்த்தின.

தென் ஆப்பிரிக்கா-ஜிம்பாப்வே

இந்நிலையில், நமீபியா தலைநகர் விந்தோக் நகரில் நடைபெற்ற 4-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

தென் ஆப்பிரிக்கா 185 ரன்கள்

அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 185 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய பிரிடோரியஸ் 51 பந்தில் 94 ரன்கள் குவித்தார். டெவால்டு பிரெவிஸ் 41 ரன் எடுத்தார்.

ஜிம்பாப்வே சார்பில் மாதவெரே 3 விக்கெட்டும், பிராட் இவான்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

சிக்கந்தர் ராசா போராட்டம்

இதையடுத்து, 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே களமிறங்கியது. சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.

சிக்கந்தர் ராசா பொறுப்புடன் ஆடி 45 ரன் சேர்த்தார். நியாமுரி 27 ரன்னும் எடுத்தார்.

இறுதியில், ஜிம்பாப்வே அணி 17.4 ஓவரில் 142 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் ஜிம்பாப்வேவை 43 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிபெற்றது.

தென் ஆப்பிரிக்கா சார்பில் போர்ன் பார்சுன் 4 விக்கெட்டும், டூவான் யான்சென் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 2 வெற்றியுடன் 4 புள்ளிகள் பெற்றன.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com