2வது ஒருநாள் போட்டி: டி காக் சதத்தால் பாகிஸ்தானை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா

டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.முதலில் பேட் செய்த அந்த அணி 50 ஓவரில் 269 ரன்கள் எடுத்தது.
2வது ஒருநாள் போட்டி: டி காக் சதத்தால் பாகிஸ்தானை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா
Published on

பைசலாபாத்:

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.

முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. தொடர்ந்து நடந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது. ஒருநாள் தொடரின் முதல் போட்டி முடிவில் 1-0 என பாகிஸ்தான் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்தது. சல்மான் ஆகா 69 ரன்னும், முகமது நவாஸ் 59 ரன்னும், தொடக்க ஆட்டக்காரர் சயீம் அயூப் 53 ரன்னும் எடுத்தனர்.

தென் ஆப்பிரிக்கா சார்பில் பர்கர் 4 விக்கெட்டும், பீட்டர் 3 விக்கெட்டும், கார்பின் பாஸ்ச் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் குயிண்டன் டி காக் அதிரடியாக ஆடி சதமடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். டோனி டி சோர்சி அவருக்கு பக்கபலமாக நின்று அரை சதம் கடந்து 79 ரன்கள் எடுத்தார்.

இறுதியில், தென் ஆப்பிரிக்கா 40.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 270 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. டி காக் 123 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம் ஒருநாள் தொடர் 1-1 என சமனில் உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com