முதல் ஒருநாள் போட்டி: நமீபியாவை எளிதில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா

முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 348 ரன்கள் குவித்தது.
south africa
Published on
Summary

நமீபியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஜோர்டான் ஹெர்மன் அபார சதத்தால் தென் ஆப்பிரிக்க அணி 99 ரன் வித்தியாசத்தில் வென்றது.

தென் ஆப்பிரிக்க அணி நமீபியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற நமீபிய அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 348 ரன்கள் குவித்தது.

190 ரன் சேர்த்த ஹெர்மன் -ஜோர்ஜி ஜோடி

2வது விக்கெட்டுக்கு ஜோர்டான் ஹெர்மன் உடன் இணைந்த டோனி ஜி ஜோர்ஜி அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. 2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 190 ரன்கள் சேர்த்த நிலையில் ஜோர்ஜி 72 ரன்னில் ஆட்டமிழந்தார்.

150 ரன் குவித்த ஹெர்மன்

சிறப்பாக ஆடிய ஹெர்மன் சதமடித்து அசத்தினார். ஹெர்மன் 150 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

நமீபியா சார்பில் ரூபன் டிரம்ப்மான் 4 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, 349 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நமீபியா களமிறங்கியது. மழை காரணமாக ஆட்டம் சிறிது தடைபட்டது.

அதன்பின், டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 31 ஓவரில் 262 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை நமீபியா அணி தாக்குப் பிடித்து நிதானமாக ஆடியது.

இறுதியில், நமீபியா 31 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 99 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆட்ட நாயகன் ஹெர்மன்

ஆட்ட நாயகன் விருது ஜோர்டான் ஹெர்மனுக்கு வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com