வங்கதேசதுக்கு எதிராக சதம் விளாசிய டோனி டி ஜோர்ஜி- ஸ்டப்ஸ்: தெ. ஆப்பிரிக்கா முதல் நாள் முடிவில் 307/2

ஸ்டப்ஸ் 106 ரன்கள் எடுத்த நிலையில் போல்ட் ஆனார்.டோனி டி ஜோர்ஜி 141 ரன்களுடனும் டேவிட் பெடிங்காம் 18 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
வங்கதேசதுக்கு எதிராக சதம் விளாசிய டோனி டி ஜோர்ஜி- ஸ்டப்ஸ்: தெ. ஆப்பிரிக்கா முதல் நாள் முடிவில் 307/2
Published on

தென் ஆப்பிரிக்கா அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக வங்கதேசம் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரு அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக ஐடன் மார்க்ராம்- டோனி டி ஜோர்ஜி களமிறங்கினர். நிதானமாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 69 ரன்கள் குவித்தது. மார்க்ராம் 33 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து டோனி டி ஜோர்ஜி மற்றும் ஸ்டப்ஸ் ஜோடி வங்கதேச அணியின் பந்து வீச்சை எளிதாக எதிர்கொண்டு விளையாடினர். இதனால் இருவரும் சதம் அடித்து அசத்தினர். டெஸ்ட்டில் இருவருக்கும் இது முதல் சதம் ஆகும். ஸ்டப்ஸ் 106 ரன்கள் எடுத்த நிலையில் போல்ட் ஆனார்.

இதனால் முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகளை இழந்து 307 ரன்கள் குவித்தது. டோனி டி ஜோர்ஜி 141 ரன்களுடனும் டேவிட் பெடிங்காம் 18 ரன்களுடன் களத்தில் உள்ளனர். வங்கதேச தரப்பில் தைஜுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com