ஜோகன்னஸ்பெர்க் டெஸ்ட்: ஆக்கர்மேன் சதத்தால் 2ம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 287/4

தென் ஆப்பிரிக்காவின் ஆக்கர்மேன் சதமடித்து 157 ரன் குவித்தார்.
ackerman
Published on: 
Summary

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 287 ரன் எடுத்துள்ளது.

வங்கதேச அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்கில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது.

வங்கதேசம் 400 ரன் குவிப்பு

அதன்படி, முதலில் களமிறங்கிய வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 101.2 ஓவரில் 400 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

சரிவிலிருந்து மீட்ட ஹிருதோய், லிட்டன்

தவ்ஹித் ஹிருதோய்-லிட்டன் தாஸ் ஜோடி பொறுப்புடன் ஆடி சரிவை நோக்கிச் சென்ற அணியை போராடி மீட்டது.

6-வது விக்கெட்டுக்கு 206 ரன்கள் சேர்த்த நிலையில் தவ்ஹித் ஹிருதோய் 137 ரன்னில் வெளியேறினார். லிட்டன் தாஸ் சதமடித்து 120 ரன்னில் ஆட்டமிழந்தார்.

தென் ஆப்பிரிக்க அணி சார்பில் ரபாடா 5 விக்கெட்டும், டேன் பீட்டர்சன் 4 விக்கெட்டும், மார்கோ யான்சென் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் எய்டன் மார்கிரம் 4 ரன்னில் அவுட்டானார்.

ஆக்கர்மேன் உடன் ஜுபைர் ஹம்சா இணைந்து நிதானமாக ஆடினார். ஹம்சா அரை சதமடித்தார்.

2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 202 ரன்கள் சேர்த்த நிலையில், ஜுபைர் ஹம்சா 83 ரன்னில் ஆட்டமிழந்தார்.

சதமடித்த ஆக்கர்மேன்

சிறப்பாக ஆடிய ஆக்கர்மேன் 157 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 62 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்துள்ளது. டெம்பா பவுமா 19 ரன்னும், ரிக்கல்டன் 7 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

வங்கதேசம் சார்பில் ஹசன் மஹ்முத் 3 விக்கெட்டும், மொமினுல் ஹக் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

X