ICC ஆகஸ்ட் மாத சிறந்த வீரர் விருதை வென்றார் சோனல் தினுஷா

பரிந்துரை பட்டியலில் இங்கிலாந்தின் ஆலி ராபின்சன், வங்கதேசத்தின் ஹாசன் மஹ்முதும் இடம்பெற்றனர்.
sonal dinusha
Published on
Summary

ஆகஸ்ட் மாதத்தின் சிறந்த வீரர் விருதை இலங்கையின் சோனல் தினுஷா கைப்பற்றியுள்ளார்.

ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு ஐசிசி சார்பில் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, ஐசிசியின் ஆகஸ்ட் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இலங்கை அணியின் சோனல் தினுஷா, இங்கிலாந்தின் ஆலி ராபின்சன் மற்றும் வங்கதேசத்தின் ஹாசன் மஹ்முத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

முதல் முறை விருது

இந்நிலையில், ஐசிசியின் ஆகஸ்ட் மாதத்தின் சிறந்த வீரருக்கான விருதை இலங்கையின் சோனல் தினுஷா வென்றார்.

சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சோனல் தினுஷா, முதல் முறையாக ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதினை வென்றுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 140 ரன்ற நம்பமுடியாத சராசரியுடன் அவர் 420 ரன்கள் குவித்தார்.

முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் சோனல் தினுஷா 100 ரன்னும், இரண்டாவது இன்னிசில் 84 ரன்னும் எடுத்தார்.

இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் 103 ரன்னும், இரண்டாவது இன்னிங்சில் 133 ரன்னும் எடுத்தார். இவரது அபார ஆட்டத்தினால் இரண்டாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது.

ஐசிசி சிறந்த வீரர் விருது வென்றது தொடர்பாக சோனல் தினுஷா பேசியதாவது:

மிகுந்த மகிழ்ச்சி

என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் இவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் எப்போதும் என்னுடைய மனதுக்கு நெருக்கமானதாக இருக்கும்.

மூன்று சதங்கள், அதுவும் கொழும்பு மற்றும் காலே திடலில் விளாசியது சிறப்பான உணர்வைத் தந்தது.

முதல் போட்டியில் தோற்றிருந்தாலும், இரண்டாவது போட்டியில் இலங்கை அணி விளையாடிய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது.

இலங்கை அணிக்காக இனி வரும் காலங்களில் எனது சிறப்பான பங்களிப்பை அளிப்பேன் என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com