பாகிஸ்தான்- இலங்கை 2-வது டெஸ்ட் லாகூரில் இருந்து திடீர் மாற்றம்..!

2-வது டெஸ்ட் போட்டி லாகூரில் நடைபெற என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
பாகிஸ்தான்- இலங்கை  2-வது டெஸ்ட் லாகூரில் இருந்து திடீர் மாற்றம்..!
Published on: 
Summary

பாகிஸ்தானின் லாகூர் நகரில் காற்று மாசுபாடு மற்றும் கடுமையான புகைமூட்டம் அதிகரித்து வருவதால், பாகிஸ்தான் – இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை ராவல்பிண்டிக்கு மாற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) முடிவு செய்துள்ளது.

பாகிஸ்தான்- இலங்கை இடையே 2-வது போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. 2-வது போட்டி லாகூர் கடாஃபி மைதானத்தில் 17-ந்தேதி தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

காற்று மாசுபாட்டால் மாற்றம்

லாகூரில் கடந்த சில நாட்களாக புகைமூட்டம் அதிகரித்து, காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. அந்நகரின் காற்றுத்தரக் குறியீடு (AQI) 421 என்ற அபாயகரமான அளவை எட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் வீரர்கள், பயிற்சியாளர்கள், நடுவர்கள் மற்றும் ரசிகர்களின் உடல்நலப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு போட்டி நடைபெறும் இடத்தை மாற்றியுள்ளதாக PCB தெரிவித்துள்ளது.

ராவல்பிண்டியில் அடுத்தடுத்த போட்டிகள்

ஏற்கெனவே இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியும் அதே மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால், ராவல்பிண்டியில் தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன.

X