2-வது டி20: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 163 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை

மந்தமாக விளையாடிய நிசங்கா 49 பந்தில் 54 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரொமாரியோ ஷெப்பர்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
2-வது டி20: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 163 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை
Published on

மந்தமாக விளையாடிய நிசங்கா 49 பந்தில் 54 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி தொடக்க வீரர்களாக பதும் நிசங்கா- குசல் மெண்டீஸ் களமிறங்கினார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 77 ரன்கள் குவித்தது. இதில் குசல் மெண்டீஸ் 26 ரன்னில் வெளியேறினார். நிதானமாக விளையாடிய நிசங்கா 49 பந்தில் 54 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

அடுத்து வந்த வீரர்கள் குசல் பெரேரா 24, கமிந்து மென்டிஸ் 19, அசலங்கா 9 என வெளியேறினர். இதனால் இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரொமாரியோ ஷெப்பர்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com