பிக்பாஷ் லீக் தொடர்: முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சிட்னி தண்டர்

முதலில் ஆடிய சிட்னி சிக்சர்ஸ் 20 ஓவரில் 151 ரன்கள் எடுத்தது.அடுத்து ஆடிய சிட்னி தண்டர் 157 ரன்கள் எடுத்து வென்றது.
பிக்பாஷ் லீக் தொடர்: முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சிட்னி தண்டர்
Published on

மெல்போர்ன்:

ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடரான பிக் பாஷ் லீக் தொடரில் லீக் சுற்று போட்டிகள் முடிந்து பிளே ஆப் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

நேற்று நடந்த சேலஞ்சர் சுற்று போட்டியில் சிட்னி தண்டர், சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிட்னி தண்டர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய சிட்னி சிக்சர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்தது. ஜோர்டான் சில்க் 43 ரன்னும், துவார்ஷுயிஸ் 30 ரன்னும், ஹென்ரிக்ஸ் 29 ரன்னும் எடுத்தனர்.

அடுத்து இறங்கிய சிட்னி தண்டர் அணி 18.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற சிட்னி தண்டர் அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

சாம் பில்லிங்ஸ் 29 பந்தில் 42 ரன் குவித்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததால் ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.

வரும் 27-ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் சிட்னி தண்டர் அணி, ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியுடன் மோதுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com