ஷேவாக் சாதனை முறியடிப்பு: பல சாதனைகளை படைத்த சுப்மன் கில்

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 2-0 என கைப்பற்றியது.
gill
Published on: 
Summary

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

Summary

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. கவுகாத்தியில் நடந்த போட்டியில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 406 ரன்கள் குவித்தது.

அமீர் ஜாங்கோ சதம்

3 வீரர்கள் சதம் அடித்தனர். அமீர் ஜாங்கோ 77 பந்தில் 114 ரன்னும் (13 பவுண்டரி, 3 சிக்சர் ), கேப்டன் ஷாய் ஹோப் 94 பந்தில் 104 ரன்னும் (8 பவுண்டரி, 3 சிக்சர்), கேம்ப்பெல் 68 பந்தில் 101 ரன்னும் (9 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர்.

இந்தியா சார்பில் குர்னூர் பிரார், ஜடேஜா, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இந்தியா அபாரம்

அதன்பின் ஆடிய இந்தியா 406 ரன் இலக்கை 39 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் எளிதில் எடுத்தது. 43.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 406 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதமும், ரோகித் சர்மா சதமும் அடித்தனர். சுப்மன் கில் 133 பந்தில் 223 ரன்னும் (26 பவுண்டரி, 8 சிக்சர்), ரோகித் சர்மா 75 பந்தில் 101 ரன்னும் (10 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. திருவனந்தபுரத்தில் நடந்த முதல் ஆட்டத்திலும் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது. இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஆட்டம் நாளை மறுநாள் நடக்கிறது.

சுப்மன் கில் பல சாதனை

கவுகாத்தி மைதானத்தில் நேற்று சாதனை மழை பொழியப்பட்டது. கேப்டன் சுப்மன் கில் பல சாதனைகளைப் படைத்தார். அவர் 2- வது முறையாக இரட்டை சதம் அடித்தார். இதற்கு முன் 2023- ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக ( ஐதராபாத்) 208 ரன் எடுத்து இருந்தார். ரோகித் சர்மா அதிகபட்சமாக 3 தடவை இரட்டை சதம் அடித்துள்ளார்.

ஒருநாள் போட்டியில் ஒரு ஆட்டத்தில் அதிக ரன் எடுத்த வீரர்களில் ரோகித் சர்மா ( 264), மார்ட்டின் குப்தில் (237) ஆகியோருக்கு அடுத்தபடியாக சுப்மன் கில் (223) உள்ளார்.

ஷேவாக் சாதனை முறியடிப்பு

223 ரன் குவித்ததன் மூலம் கேப்டன் பதவியில் அதிக ரன் எடுத்த இந்தியர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்தார். வீரேந்தர் ஷேவாக் சாதனையை அவர் முறியடித்தார். ஷேவாக் கேப்டனாக இருந்தபோது 2011-ல் இந்தூர் மைதானத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 219 ரன் குவித்ததே சாதனையாக இருந்தது. 15 ஆண்டுக்குப் பிறகு இந்த சாதனை முறியடிக்கப்பட்டது.

சுப்மன் கில் அதி வேகத்தில் இரட்டை சதமடித்து சாதனை படைத்தார். 2-வது பேட்டிங்கின் போது அதிக ரன் எடுத்தவர் என்ற சாதனையும் அவர் படைத்தார்.

3-வது அதிகபட்சம்

இந்தப் போட்டியில் மொத்தம் 811 ரன் ( வெஸ்ட் இண்டீஸ் 405+இந்தியா 406) குவிக்கப்பட்டது. ஒருநாள் போட்டியில் இது 3- வது அதிகபட்ச ஸ்கோராகும். 406 ரன் இலக்கை எடுத்ததன் மூலம் சாதனையில் இந்தியா 2-வது இடம் பிடித்தது.

சொந்த மண்ணில் இந்தியா முதல் முறையாக 400 ரன் இலக்கை எடுத்து சாதனை படைத்தது. இதற்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 2013-ம் ஆண்டு ஒரு விக்கெட் இழப்பிற்கு 362 ரன் இலக்கை (ஜெய்ப்பூர்) எடுத்ததே சாதனையாக இருந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com