உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 3000 ரன் கடந்த முதல் இந்திய வீரர்: சுப்மன் கில் சாதனை

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் 98 ரன்னில் அவுட்டாகி, சதத்தை நழுவவிட்டார்.
shubman gill
Published on: 
Summary

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 3000 ரன்களைக் குவித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார்.

இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 மற்றும் ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றியது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் வெல்லிங்டனில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 368 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஹென்றி நிக்கோல்ஸ் 175 ரன்னும், கிளென் பிலிப்ஸ் 118 ரன்னும் எடுத்தனர்.

இந்தியா சார்பில் பும்ரா 4 விக்கெட்டும், அர்ஷ்தீப் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய இந்தியா மூன்றாம்நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 486 ரன்கள் குவித்துள்ளது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 85 ரன்னும், படிக்கல் 80 ரன்னும் எடுத்தனர். கே.எல்.ராகுல் சதமடித்து 136 ரன்னில் அவுட்டானார். கேப்டன் சுப்மன் கில் 98 ரன் எடுத்து சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.

இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஜெய்ஸ்வால் 98 ரன் சேர்த்ததன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 3,000 ரன்களைக் குவித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

77-வது இன்னிங்சில் இந்த சாதனையை எட்டிய கில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்த மைல்கல்லை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்றுள்ளார்.

சுப்மன் கில் இதுவரை 43 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, இந்திய அணியின் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

சுப்மன் கில்லைத் தொடர்ந்து ரிஷப் பண்டும் இப்போட்டியின்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 3,000 ரன்களைக் கடந்த முதல் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் என்ற சாதனையைப் படைத்தார்.

X