ஐசிசி தரவரிசை: ஒருநாள் பந்து வீச்சாளர் பட்டியலில் முதல் இடம் பிடித்த அப்ரிடி

அப்ரிடி 7 இடங்கள் முன்னேறி முதல் இடத்தை கைப்பற்றி உள்ளார்.டாப் 10-ல் இந்திய பந்து வீச்சாளர்களில் சிராஜ், குல்தீப் யாதவ் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.
ஐசிசி தரவரிசை: ஒருநாள் பந்து வீச்சாளர் பட்டியலில் முதல் இடம் பிடித்த அப்ரிடி
Published on

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் ஒருநாள் போட்டிகளின் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் அப்ரிடி முதல் இடத்தை பிடித்துள்ளார். இவர் 7 இடங்கள் முன்னேறி முதல் இடத்தை கைப்பற்றி உள்ளார்.

டாப் 10-ல் இந்திய பந்து வீச்சாளர்களில் சிராஜ், குல்தீப் யாதவ் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். சிராஜ் 3-வது இடத்திலும் குல்தீப் 7-வது இடத்தில் உள்ளனர். பும்ரா 11-வது இடத்தில் தொடர்கிறார்.

முதல் இடத்தை பிடித்துள்ள அப்ரிடி நடப்பு உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஜம்பாவுடன் இணைந்துள்ளார். இருவரும் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com