U-19 ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் சேவாக், டிராவிட் வாரிசு..!

நவம்பர் 4 முதல் 14-ந்தேதி வரை ஓமனில் ஆசிய கோப்பை போட்டி நடைபெற இருக்கிறது.
சேவாக் மற்றும் டிராவிட் வாரிசு
சேவாக் மற்றும் டிராவிட் வாரிசு
Published on: 

19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் சேவாக் மற்றும் டிராவிட் மகன் இடம் பிடித்துள்ளனர்.

சேவாக் மகன் ஆர்யிவீர் ஆவார். ராகுல் டிராவிட் மகன் அன்வய் ஆவார். லக்ஷயா ராய்சந்தானி கேப்டனாகவும், யாஷ்பர்தன் சவுகான் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 எனக் கைப்பற்றியிருந்தது. ஒருநாள் தொடரை 3-0 எனக் கைப்பற்றியிருந்தது. இலங்கையில் நடைபெற்ற 4 நாட்கள் கொண்ட 2 போட்டிகள் அடங்கிய தொடரை 1-0 எனக் கைப்பற்றியிருந்தது. ஒருநாள் தொடரை 1-2 என இழந்தது.

ஆசிய கோப்பையில் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ளன. ஆப்கானிஸ்தான், வங்கதேசம், மலேசியா, இலங்கை பி பிரிவில் இடம் பிடித்துள்ளன.

ஆர்யிவீர் சேவாக் டாப்ஆர்டர் பேட்ஸ்மேன்

டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ஆர்யிவீர் சேவாக், ஒருநாள் தொடரில் 28, 47, 34 ரன்கள் அடித்துள்ளார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான டிராவின் மகன் அன்வய் 38, 9 ரன்களும், இலங்கைக்கு எதிரான கடைசி போட்டியில் 67 பந்துகளில் 87 ரன்களும் விளாசினார்.

X