அந்த இடத்தில் அடிவாங்கிய சர்பராஸ் கான்.. 'அவர் தான் அப்பா ஆகிட்டாரே'-ரவி சாஸ்திரி கமென்ட் வைரல்

ரவிச்சந்திரன் அஷ்வின் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். நியூசிலாந்து அணி 259 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அந்த இடத்தில் அடிவாங்கிய சர்பராஸ் கான்.. 'அவர் தான் அப்பா ஆகிட்டாரே'-ரவி சாஸ்திரி கமென்ட் வைரல்
Published on

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்தது. நியூசிலாந்து அணியின் டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா மற்றும் மிட்செல் சாண்ட்னர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்கள் முறையே 76, 65 மற்றும் 33 ரன்களை அடித்தனர்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 259 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் அபாரமாக பந்துவீசினார். இவர் மட்டும் ஏழு விக்கெட்டுகளை கைப்பிற்றினார். இவருடன் ரவிச்சந்திரன் அஷ்வின் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்த இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து ஆடிக் கொண்டிருந்தது. அப்போது சர்பராஸ் கான் பேட்டர் அருகிலேயே ஃபீல்டிங் செய்ய நின்று கொண்டிருந்தார். அப்பது சர்ஃப்ராஸ் கானின் அந்தரங்க உறுப்பில் பந்து வேகமாக அடித்தது.

இதை பார்த்த தினேஷ் கார்த்திக் கமென்ட்ரியில் இருந்த படி, "சர்பராஸ் கான் பந்து அவரை தாக்கியதை விரும்பியிருக்க மாட்டார் என்று தெரிவித்தார்." இதற்கு பதில் அளித்த ரவி சாஸ்திரி, "அவர் தான் அப்பா ஆகிவிட்டாரே," என்று தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com