டி20 கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் 3 சதங்கள்: சஞ்சு சாம்சன் புது சாதனை

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்தியா வென்றது. இதன்மூலம் இந்திய அணி 3-1 என டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது.
டி20 கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் 3 சதங்கள்: சஞ்சு சாம்சன் புது சாதனை
Published on

ஜோகனஸ்பெர்க்:

தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான 4வது டி20 போட்டி ஜோகனஸ்பெர்கில் நடைபெற்றது.

முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 283 ரன்களைக் குவித்தது. சஞ்சு சாம்சன் 109 ரன்னும், திலக் வர்மா 120 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 148 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதன்மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை 3-1 என கைப்பற்றி அசத்தியது.

இந்நிலையில், சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் 3 சதமடித்த இந்திய வீரர் என்ற புதிய சாதனையை சஞ்சு சாம்சன் படைத்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com