சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதம்: புதிய சாதனை படைத்த சால்ட்

பிலிப் சால்ட் 60 பந்தில் 8 சிக்சர், 15 பவுண்டரி உள்பட 141 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 304 ரன்கள் குவித்தது.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதம்: புதிய சாதனை படைத்த சால்ட்
Published on

இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது டி20 போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 304 ரன்கள் குவித்தது. பிலிப் சால்ட் 60 பந்தில் 8 சிக்சர், 15 பவுண்டரி உள்பட 141 ரன்கள் குவித்தார்.

அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 158 ரன்னில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் 146 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியில் அதிரடி சதம் அடித்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதம் விளாசியவர்களின் பட்டியலில் பில் சால்ட் 2வது இடத்திற்கு முன்னேறினார்.

சூர்யகுமார் யாதவ் மற்றும் பில் சால்ட் ஆகியோர் தலா 4 சதங்கள் அடித்துள்ளனர். ரோகித் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 5 சதங்களுடன் முதல் இடத்தில உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com