தோல்விக்கான சோகம் முகத்துல கொஞ்சமாவது தெரியுதானு பாருங்க.. டோனியை கலாய்த்த சாக்ஷி

முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 191 ரன்கள் எடுத்தது.டெல்லி அணி 20 ரன்கள் எடுத்து முதல் வெற்றியை பதிவு செய்தது.
தோல்விக்கான சோகம் முகத்துல கொஞ்சமாவது தெரியுதானு பாருங்க.. டோனியை கலாய்த்த சாக்ஷி
Published on

ஐபிஎல் தொடரின் 13-வது லீக் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 191 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 171 ரன்கள் எடுத்தது. இதனால் டெல்லி அணி 20 ரன்கள் எடுத்து முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில் இந்த போட்டியில் அதிரடியாக பேட்டிங் செய்த டோனிக்கு எலக்ட்ரிக் ஸ்டிரைக்கர் ஆஃப் தி மேட்ச் என்ற ஸ்பெஷல் விருது வழங்கப்பட்டது. அதைப் பார்த்த அவருடைய மனைவி சாக்ஷி, தோல்வியை சந்தித்த சோகம் கொஞ்சமாவது முகத்தில் தெரியுதா பாருங்க என்ற வகையில் இன்ஸ்டாகிராமில் கலாய்த்துள்ளார்.

இது பற்றி இன்ஸ்டாகிராமில் சாக்ஷி கூறியதாவது:-

ஹேய் மஹி. நாம் போட்டியில் தோல்வியை சந்தித்தோம் என்பதை உணர முடியவில்லை என்று சிரிக்கும் ஸ்மைலியை போட்டு கலாய்த்துள்ளார். அத்துடன் வெற்றி பெற்ற ரிஷப் பண்ட்க்கு அவர் தெரிவித்துள்ள வாழ்த்து பின்வருமாறு, அனைத்துக்கும் முதலாக ரிஷப் பண்ட்டுக்கு வரவேற்பு கொடுப்போம் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com