"அமுத கடல் உனக்கு தான்" பாடலை பாடிய சாய் கிஷோர் - வைரலாகும் வீடியோ

குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
"அமுத கடல் உனக்கு தான்" பாடலை பாடிய சாய் கிஷோர் - வைரலாகும் வீடியோ
Published on: 

இந்திய கிரிக்கெட் வீரரும், ஐ.பி.எல்.-இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சாய் கிஷோர். 2024 ஆசிய கோப்பை தொடர் மூலம் இந்திய அணியில் அறிமுகமான சாய் கிஷோர் தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.

சென்னை சேர்ந்தவரான சாய் கிஷோர் தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற சித்தா படத்தில் இடம்பெற்ற "அமுத கடல் உனக்குத் தான்" பாடலை பாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சித்தார்த் நடித்து வெளியான சித்தா படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இந்த பாடலும் சமூக வலைதளங்களில் வைரலானது.

X

Maalai Malar
www.maalaimalar.com