

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி ஆல்-ரவுண்டராக திகழ்ந்தவர் பொல்லார்டு. இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியவர். விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், பயிற்சியாளராக இருந்து வந்தார். அதேவேளையில் தென்ஆப்பிரிக்காவில் நடைபெறும் பிரான்சைஸ் கிரிக்கெட் (SA20), வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் கரீபியன் பிரீமியர் லீக் போன்றவற்றில் விளையாடி வருகிறார்.
இதற்கிடையே மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஜெயவர்தனே தனது பதவியில் இருந்து விலகினார். இதனால் பொல்லார்டை தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொல்லார்டு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதால், தென்ஆப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் பிரான்சைஸ் லீக்கில் ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் (JSK) ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதால், ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட முடியாத நிலை உருவாகியுள்ளது.
இதனால் ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். இதை அணி நிர்வாகமும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வருடம் தொடக்கத்தில் நடைபெற்ற ஏலத்தில்தான் ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணி பொல்லார்டை ஏலத்தில் எடுத்தது.
பொல்லார்டை 90.272 அமெரிக்க டாலருக்கு ஏலம் எடுத்தது. அவருக்குப் பதிலாக மற்றொரு வீரரை ஜோகன்னஸ்பர்க் Trade செய்ய இருக்கிறது.
தென்ஆப்பிரிக்கா லீக் (SA20) 2027 சீசன் ஜனவரி 17-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு முன்னதாக டிசம்பர் 16-ந்தேதி நடைபெற இருக்கும் ஐ.பி.எல். ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக கலந்து கொள்ள இருக்கிறார்.