டி20 உலகக் கோப்பையில் காயம் ஏற்பட்டது போல் நடித்தேன் - மனம் திறந்த ரிஷப் பண்ட்

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றியது.ரிஷப் பண்ட்டின் புத்திசாலித்தனம் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது.
Rishabh Pant
Published on

சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி உலகக் கோப்பையை தட்டிச் சென்றது. 2008-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.

இறுதிப்போட்டியின் முக்கிய கட்டத்தில் ரிஷப் பண்ட்டிற்கு காயம் ஏற்பட்டு ஆட்டம் தடைபட்டது. அந்த தாமதம் இந்திய அணிக்கு சாதகமாக அமைந்தது.

இது குறித்து பேசிய ரோகித் சர்மா, "தென் ஆப்பிரிக்கா அணிக்கு 30 பந்தில் 30 ரன்கள் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் ரிஷப் பண்ட் தனது புத்திசாலிதனத்தை உபயோகித்து ஆட்டத்தை சிறிது நேரம் நிறுத்தினார். காலில் காயம் ஏற்பட்டதாக கூறி அதில் டேப் போடப்பட்டது. ஆட்டம் அதிரடியாக சென்ற நிலையில் இந்த சம்பவத்தால் ஆட்டம் மெதுவாகியது.

சிறிது நேரம் கழித்து ஆட்டம் தொடங்கியதால் முதல் பந்திலேயே கிளாசன் அவுட் ஆனார். அதனால் தென் ஆப்பிரிக்கா அணிக்கு பதட்டம் ஏற்பட்டது. இந்திய அணி வீரர்கள் எதிரணி வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்தனர். இதனால் ஆட்டம் எங்கள் பக்கம் திரும்பியது. ரிஷப் பண்ட்டின் புத்திசாலித்தனம் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தனக்கு ஏற்பட்ட காயம் குறித்து பேசிய ரிஷப் பண்ட், "நான் என் பிசியோவிடம் முடிந்தவரை நேரம் கடத்த சொல்லி கேட்டு கொண்டேன். நாம் சிறிது நேரத்தை வீணடிக்க வேண்டும் என்று அவரிடம் கூறினேன். அவர் என்னிடம் உன் முழங்கால் நன்றாக இருக்கிறதா? என்று கேட்டார். அதெல்லாம் நன்றாக தான் இருக்கிறது. நான் சும்மா நடிக்கிறேன் என்று அவரிடம் கூறினேன்" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com