

காலே போட்டியில் இந்திய அணியின் ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டியில் அதிவிரைவில் 100 சிக்சர்களை விளாசி வரலாற்று சாதனை படைத்தார்.
இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 462 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தேவ்தத் படிக்கல் 167 ரன் குவித்தார்.
இலங்கை சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 4 விக்கெட்டும், கேஷரா நுவந்தா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சோனல் தினுஷா 100 ரன்னில் அவுட்டானார்.
இந்தியா சார்பில் மானவ் சுதர் 4 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
178 ரன் முன்னிலை பெற்ற இந்திய அணி 2வது இன்னிங்சில் 193 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ரிஷப் பண்ட் 66 ரன்னில் அவுட்டானார்.
இந்நிலையில், ரிஷப் பண்ட் 89 இன்னிங்ஸ்களில் 100 சிக்சர்களை விளாசி அதிவிரைவாக 100 சிக்சர்கள் அடித்தவர் எனற சாதனையைப் படைத்தார்.
இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை அடித்த வீரர்கள் மற்றும் இன்னிங்ஸ் எண்ணிக்கை:
ரிஷப் பண்ட் 100 சிக்சர்கள் - 89 இன்னிங்ஸ்.
பென் ஸ்டோக்ஸ் 138 சிக்சர்கள் - 220 இன்னிங்ஸ்
பிரெண்டன் மெக்கல்லம் 107 சிக்சர்கள் - 176 இன்னிங்ஸ்
ஆடம் கில்கிறிஸ்ட் - 100 சிக்சர்கள் - 137 இன்னிங்ஸ்.