4வது முறையாக ஐசிசியின் சிறந்த நடுவருக்கான விருதை வென்றார் ரிச்சர்ட் இல்லிங்வொர்த்

தொடர்ச்சியாக 3 ஆவது ஆண்டாக இவ்விருதை ரிச்சர்ட் இல்லிங்வொர்த் (61) வென்றுள்ளார். முன்னதாக 2019,2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் இவ்விருதை அவர் வென்றுள்ளார்
4வது முறையாக ஐசிசியின் சிறந்த நடுவருக்கான விருதை வென்றார் ரிச்சர்ட் இல்லிங்வொர்த்
Published on

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஆண்டுதோறும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.

அந்த வகையில் கடந்த ஆண்டின் (2024) சிறந்த நடுவருக்கான விருதை இங்கிலாந்தின் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் வென்றுள்ளார்.

தொடர்ச்சியாக 3 ஆவது ஆண்டாக இவ்விருதை ரிச்சர்ட் இல்லிங்வொர்த் (61) வென்றுள்ளார். முன்னதாக 2019, 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் இவ்விருதை அவர் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com