டி20 கிரிக்கெட்டில் அபாரம்: 200 விக்கெட் வீழ்த்தி ரஷித்கான் சாதனை

முதல் டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது.
rashid khan
Published on: 
Summary

ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் டி20 கிரிக்கெட் போட்டியில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற உலக சாதனையை படைத்தார்.

ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஷார்ஜாவில் நடந்து வருகிறது. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் 37 ரன் வித்தியாசத்தில் வென்றது.

ஒமர்சாய் சதம்

இரு அணிகள் மோதிய 2-வது டி20 போட்டி நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 221 ரன்கள் குவித்தது. ஓமர்சாய் சதமடித்து 116 ரன்கள் அடித்தார். அகமது சாய் 52 ரன்கள் எடுத்தார்.

அடுத்து ஆடிய ஜிம்பாப்வே 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஆப்கானிஸ்தான் 19 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வீணான சிக்கந்தர் ராசா சதம்

ஜிம்பாப்வே அணி கேப்டன் சிக்கந்தர் ராசா தனி ஆளாகப் போராடி சதமடித்து 102 ரன் எடுத்தார். ஆனால் அது பலனளிக்கவில்லை.

இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

ரஷித்கான் உலக சாதனை

இந்நிலையில், ரஷித் கான் டி20 கிரிக்கெட் போட்டியில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற உலக சாதனையை படைத்தார். இதுவரை 120 போட்டிகளில் விளையாடிய அவர் 200 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற சாதனையை ரஷித்கான் படைத்தார். தற்போது 200 விக்கெட் என்ற மைல்கல்லை தொட்ட முதல் வீரர் என்ற சிறப்பை பெற்றார்.

ரஷித் கானுக்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்தின் ஆதில் ரஷித் 171 விக்கெட்டும், ஹாங்காங்கின் எஹ்சான் கான், நியூசிலாந்தின் இஷ் சோதி தலா 165 விக்கெட்டும், நியூசிலாந்தின் டிம் சவுதி 164 விக்கெட்டும் எடுத்துள்ளனர்.

X