சேப்பாக்கத்தில் ரஞ்சி கோப்பை போட்டி: ரசிகர்களுக்கு இலவச அனுமதி

நாளை முதல் வருகிற 12-ந்தேதி வரை தமிழ்நாடு- கர்நாடகா போட்டி நடைபெறுகிறதுதமிழ்நாடு ஐந்து போட்டியில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளது.
சேப்பாக்கத்தில் ரஞ்சி கோப்பை போட்டி: ரசிகர்களுக்கு இலவச அனுமதி
Published on

ரஞ்சி கோப்பைக்கான போட்டிகள் நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அணி தனது 6-வது லீக் போட்டியில் கர்நாடகா அணியை எதிர்த்து நாளை விளையாட இருக்கிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

இந்த போட்டியில் ரசிகர்கள் இலவசமாக நேரில் கண்டு ரசிக்கலம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

2023-24 சீசனில் தமிழ்நாடு அணி இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் தமிழ்நாடு மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. ஒரு போட்டியில் தோல்வியடைந்துள்ளது.

எலைட் குரூப் "ஜி" பிரிவில் இடம் பிடித்துள்ள தமிழக அணி புள்ளிகள் பட்டியில் முதலிடம் வகிக்கிறது. கர்நாடகா 2-வது இடத்திலும் திரிபுரா 3-வது இடத்திலும் குஜராத் 4-வது இடத்திலும் உள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com