ரஞ்சி கோப்பை: உத்தரகாண்டை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது கர்நாடகா

முதலில் களமிறங்கிய கர்நாடகா அணி 736 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதை தொடர்ந்து ஆடிய உத்தரகாண்ட் அணி 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ரஞ்சி கோப்பை: உத்தரகாண்டை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது கர்நாடகா
Published on

ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டிகள் இன்று தொடங்கின. லக்னோவில் நடைபெற்று வரும் முதல் அரையிறுதியில் கர்நாடகா- உத்தரகாண்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற உத்தரகாண்ட் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் களமிறங்கிய கர்நாடகா அணி 736 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 232 ரன்களும் கே.எல். ராகுல் 141 ரன்களும் ரவிச்சந்திரன் ஸ்மரன்135 ரன்களும் அடித்தனர்.

இதை தொடர்ந்து ஆடிய உத்தரகாண்ட் அணி 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து ஆடிய கர்நாடகா அணி 323 ரன்கள் அடித்து ஆல் அவுட்டானது.

இதை தொடர்ந்து ஆடிய உத்தரகாண்ட் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் அடித்த நிலையில் போட்டி டிரா ஆனது. முதல் இன்னிங்ஸ் ரன்கள் அடிப்படையில் கர்நாடகா அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இதன்மூலம், 10 ஆண்டுகளுக்குப் பிறகு கர்நாடகா அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. வரும் 24ம் தேதி ஹூப்ளியில் நடக்க உள்ள இறுதிப் போட்டியில் ஜம்மு காஷ்மீர் அணியுடன் கர்நாடகா பலப்பரீட்சை நடத்துகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com