

ரஞ்சி டிராபியின் 4-வது ஆட்டம் இன்று தொடங்கியது. சண்டிகரில் நடைபெற்று வரும் போட்டியில் `டி' குரூப்பில் இடம் பிடித்துள்ள தமிழ்நாடு- சண்டிகர் அணிகள் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற தமிழ்நாடு பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி விமல் குமார், என். ஜெகதீசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். விமல் குமார் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
என். ஜெகதீசன் 52 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து பிரதோஷ் ரஞ்சன் பால் உடன் பாபா இந்திரஜித் ஜோடி சேர்ந்தார். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிரதோஷ் ரஞ்சன் பால் சதம் அடிக்க, பாபா இந்திரஜித் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தமிழ்நாடு அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 320 ரன்கள் குவித்துள்ளது. பிரதோஷ் ரஞ்சன் பால் 138 ரன்களுடனும், குருசாமி அஜிடேஷ் 34 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.