இந்திய U-19 அணியில் ராகுல் டிராவிட் மகன் சமித் அறிமுகம்

சீனியர் வீரர்கள் விளையாடிடும் மகாராஜா டி20 லீக்கில் அறிமுகமாகி விளையாடி வருகிறார்.பேட்டிங் செய்வதுடன் மிதவேக பந்து வீச்சாளரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய U-19 அணியில் ராகுல் டிராவிட் மகன் சமித் அறிமுகம்
Published on

19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதராக சொந்த மண்ணில் மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு நான்கு நாள் கொண்ட போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த போட்டிகள் புதுச்சேரி மற்றும் சென்னையில் நடைபெற இருக்கிறது. செப்டம்பர் முதல் அக்டோபர் மாதம் வரை இந்த தொடர் நடைபெற இருக்கிறது.

இதற்கான 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் தடுப்புச்சுவர் என அழைக்கப்படும் ஜாம்பவான் ராகுல் டிராவிட்டின் மகன் சுமித் இடம் பிடித்துள்ளார்.

இரண்டு வகையிலான தொடருக்கான அணியிலும் சமித்திற்கு இடம் கிடைத்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் மகாராஜா டி20 டிராபியில் மைசூரு வாரியர்ஸ் அணியில் சமித் சீனியர் வீரர்கள் விளையாடும் போட்டியில் அறிமுகம் ஆனார்.

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களம் இறங்கும் சமித் ஏழு போட்டிகளில் 82 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 114 ஆகும். பேட்டிங் செய்வதுடன் சமித் மிதவேக பந்து வீச்சாளர் ஆவார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com