விளம்பரத்தில் நடிக்கும்போது காயம்: இந்தியா உடனான தொடரில் ரச்சின் ரவீந்திரா சந்தேகம்

இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் அக்டோபர் 22-ம் தேதி தொடங்குகிறது.
rachin ravindra
Published on
Summary

நியூசிலாந்தின் நட்சத்திர வீரரான ரச்சின் ரவீந்திரா டிவி விளம்பரத்தில் நடிக்கும்போது வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 5 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

இந்தத் தொடர் அடுத்த மாதம் தொடங்க உள்ளது.

முதல் கட்டமாக இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் அக்டோபர் 22-ம் தேதி தொடங்குகிறது.

ரச்சின் ரவீந்திரா காயம்

இந்நிலையில், ஆக்லாந்தில் விளம்பரத்தில் டைவ் அடிக்கும் காட்சியில் நடிக்கும்போது ரச்சின் ரவீந்திராவுக்கு வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது.

டி20 தொடரில் சந்தேகம்

இந்தக் காயம் எப்போது குணமடையும் என தெரியவில்லை என்பதால் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் அவர் பங்கேற்பது சந்தேகம் எனவும், ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக, நியூசிலாந்து அணியின் மேலாளர் மைக் சாண்டில் கூறுகையில், ரச்சினுக்கு இப்படி நடந்தது நினைத்து வருத்தம் அடைகிறோம். அவர் நலமடைவதே முதன்மை குறிக்கோளாக இருக்கிறது. அனைத்து வீரர்களுக்குமான கமர்ஷியல் படப்பிடிப்பும் போதுமான பாதுகாப்பு உபகரணங்களுடன்தான் நடைபெறும். இது முற்றிலும் துரதிஷ்டவசமானது என தெரிவித்தார்.

ரச்சின் ரவீந்திரா 51 டி20 போட்டிகளில் 759 ரன்னும், 39 ஒருநாள் போட்டிகளில் 1,424 ரன்னும், 24 டெஸ்ட் போட்டிகளில் 1,865 ரன்னும் எடுத்துள்ளார். பேட்டிங் மட்டுமின்றி பந்துவீச்சிலும் இவர் 58 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com