ஷான் பொல்லாக், டேல் ஸ்டெய்ன் வரிசையில் தென் ஆப்பிரிக்க வீரர் ரபாடா புதிய சாதனை

பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நடைபெற்றது ரபடா - யான்சன் ஜோடி அதிரடியாக விளையாடி தென் ஆப்பிரிக்கா அணியை வெற்றி பெற வைத்தனர்.
ஷான் பொல்லாக், டேல் ஸ்டெய்ன் வரிசையில் தென் ஆப்பிரிக்க வீரர் ரபாடா புதிய சாதனை
Published on

பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 57.3 ஓவரில் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனை அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

90 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சில் விளையாடிய பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 237 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதையடுத்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.

ஒருகட்டத்தில் 99 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் தென் ஆப்பிரிக்கா அணி தத்தளித்தது. அந்த சமயத்தில் ரபாடா - யான்சன் ஜோடி அதிரடியாக விளையாடினர். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 150 ரன்கள் அடுத்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தென் ஆப்பிரிக்கா அணி தகுதி பெற்றுள்ளது.

இப்போட்டியின் 2 ஆவது இன்னிங்சில் அதிரடியாக விளையாடிய ரபாடா 31 ரன்களை அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 ரன்கள் மற்றும் 300 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய 3 ஆவது தென் ஆப்பிரிக்க வீரர் என்ற சாதனையை ரபாடா படைத்துள்ளார்.

டெஸ்டில் 300 விக்கெட்டுகள் மற்றும் 1000 ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்க வீரர்கள்

ஷான் பொல்லாக் - 3,781 ரன்கள் மற்றும் 421 விக்கெட்டுகள்

டேல் ஸ்டெய்ன் - 1,251 ரன்கள் மற்றும் 439 விக்கெட்டுகள்

ககிசோ ரபாடா - 1,024 ரன்கள் மற்றும் 321 விக்கெட்டுகள்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com