டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்கள்: நாதன் லயனை முந்திய அஸ்வின்

நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 259 ரன்களில் ஆல் அவுட் ஆனது.இந்தியாவின் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்கள்: நாதன் லயனை முந்திய அஸ்வின்
Published on

மும்பை:

இந்தியா, நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி புனேயில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. சுழலுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் இந்திய அணியின் ஸ்பின்னர்கள் நியூசிலாந்தை திணறடித்தனர். அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் நியூசிலாந்து அணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இறுதியில், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 259 ரன்களில் ஆல் அவுட் ஆனது. கான்வே 76 ரன்னும், ரச்சின் ரவீந்திரா 65 ரன்னும் அடித்தனர்.

இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும் கைப்பற்றி அசத்தினர்.

இந்நிலையில், அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் சாய்த்த பவுலர்கள் வரிசையில் ஆஸ்திரேலியாவின் நாதன் லயனை (129 போட்டியில் 530 விக்கெட்) முந்தி 7வது இடம் பிடித்தார்.

அஸ்வின் இதுவரை 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 531 விக்கெட் சாய்த்துள்ளார்.

இந்தப் பட்டியலில் இலங்கையின் முரளிதரன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியாவின் வார்னே 2வது இடத்திலும், இங்கிலாந்தின்

ஆண்டர்சன் 3வது இடத்திலும், இந்தியாவின் கும்ளே 4வது இடத்திலும் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com