ஜிதேஷ் ஷர்மா திருமண நிச்சயதார்த்தம்- வாழ்த்து தெரிவித்த இந்திய வீரர்கள்

பல முக்கிய கிரிக்கெட் வீரர்கள், ஜிதேஷுக்கும் ஷலகாவுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்தியாவின் புதிய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார்.
ஜிதேஷ் ஷர்மா திருமண நிச்சயதார்த்தம்- வாழ்த்து தெரிவித்த இந்திய வீரர்கள்
Published on

இந்திய கிரிக்கெட்டின் அணியின் வீரரும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டரான ஜிதேஷ் ஷர்மா மற்றும் ஷலகா மேகேஷ்வார் ஆகியோர் ஆகஸ்டு 8-ந் தேதி நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

30 வயதான ஜிதேஷ் ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிச்சயதார்த்தம் ஆன புகைப்படங்களை பதிவிட்டு இதனை தெரிவித்தார். இருவரும் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள்.

இந்த நிகழ்வுக்காக பல முக்கிய கிரிக்கெட் வீரர்கள், ஜிதேஷுக்கும் ஷலகாவுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்தியாவின் புதிய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ், ருதுராஜ் காய்க்வாட், மற்றும் சிவம் துபே உள்ளிட்டோர் சமூக ஊடகங்களில் வாழ்த்துகளை பகிர்ந்தனர்.

ஷலகா மேகேஷ்வார் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன் என்ஜினீயரிங் படித்தவர் மற்றும் நாக்பூரில் Advent Software Pvt. Ltd-ல் Software Engineer-ஆக பணியாற்றுகிறார்.

ஜிதேஷ் ஷர்மா இந்தியா சார்பாக 9 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஆனால் சமீபத்திய ஐபிஎல் சீசனில் பெரிதாக ரன் எடுக்கவில்லை. இதனால் டி20 உலகக்கோப்பை 2024 அணியில் இடம் பெற முடியவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com