கிரிக்கெட் விளையாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிக்க விரும்புகிறேன்: ஓய்வு அறிவித்த பூனம் ராவத்

2017, மகளிர் உலகக் கோப்பையில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற பூனம் ராவத் முக்கியப் பங்கு வகித்தார்.
punam rawat
Published on: 
Summary

சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அனுபவமிக்க வீராங்கனையான பூனம் ராவத் அறிவித்துள்ளார்.

இந்திய மகளிர் அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 2009-ம் ஆண்டில் அறிமுகமானார் பூனம் ராவத். இவர் கடைசியாக 2021-ம் ஆண்டு சர்வதேசப் போட்டியில் விளையாடினார்.

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக பூனம் ராவத் அறிவித்துள்ளார்.

தனது 12 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் பயணத்தில் 4 டெஸ்ட் போட்டிகளில் 264 ரன்னும், 73 ஒருநாள் போட்டிகளில் 2,299 ரன்னும், 35 டி20 போட்டிகளில் 719 ரன்னும் எடுத்துள்ளார்.

2017-ம் ஆண்டு மகளிர் உலகக் கோப்பையில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதில் பூனம் ராவத் முக்கியப் பங்கு வகித்தார். அந்தத் தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிராக 109 ரன் எடுத்ததுடன், தீப்தி சர்மாவுடன் இணைந்து ஒருநாள் கிரிக்கெட்டில் 320 ரன்கள் என்ற சாதனை தொடக்கக் கூட்டணியையும் அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓய்வு குறித்து பேசிய பூனம் ராவத், இந்திய அணிக்காக விளையாடியது தனது வாழ்வின் மிகப்பெரிய பெருமை. கிரிக்கெட் தனக்கு அடையாளத்தையும் மறக்கமுடியாத அனுபவங்களையும் வழங்கியுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும், எதிர்காலத்தில் கிரிக்கெட் விளையாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிக்க விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com