

டி20 கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையை பிரியான்ஷ் ஆர்யா சமன் செய்துள்ளார்.
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் தமிழ்நாடு அணியை டெல்லி அணி 116 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதில் டெல்லி அணியின் பிரியான்ஷ் ஆர்யா அதிரடியாக ஆடி 181 ரன்கள் குவித்தார். இதில் 19 சிக்சர்களும் அடங்கும்.
இந்நிலையில், டி20 கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்சில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை பிரியான்ஷ் ஆர்யா சமன் செய்துள்ளார். அவர் 19 சிக்சர்களுடன் முதல் இடத்தில் இருந்த நியூசிலாந்து வீரர் பின் ஆலனின் சாதனையை சமன்செய்துள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் சான்பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்காக விளையாடிய பின் ஆலன், வாஷிங்டன் ப்ரீடம் அணிக்கு எதிராக 51 பந்தில் 151 ரன் குவித்தார். அந்த இன்னிங்சில் 19 சிக்சர்களை விளாசியிருந்தார்.
பிரியான்ஷ் ஆர்யாவின் இந்த அதிரடி ஆட்டம் சையத் முஷ்டாக் அலி டிராபி வரலாற்றிலும் புதிய சாதனையாக அமைந்துள்ளது.
இதற்குமுன் இந்தத் தொடரில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் என்ற சாதனை ஐதராபாத் அணியின் திலக் வர்மா வசம் இருந்தது. அவர் 2024 நவம்பரில் மேகாலயா அணிக்கு எதிராக 151 ரன்கள் எடுத்திருந்தார். தற்போது அந்த சாதனையையும் பிரியான்ஷ் முறியடித்துள்ளார்.