பிக்பாஷ் லீக் - 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற பெர்த் ஸ்கார்ச்சர்ஸ்

முதலில் ஆடிய பிரிஸ்பேன் அணி 175 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பெர்த் அணி 19.3 ஓவரில் 177 ரன்கள் எடுத்து வென்றது.
கோப்பை வென்ற பெர்த் அணி
கோப்பை வென்ற பெர்த் அணி
Published on

பெர்த்:

ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக் தொடரின் 12வது சீசன் நடைபெற்றது. இந்த தொடர் டிசம்பர் 13-ம் தேதி தொடங்கியது. இந்தத் தொடரின் இறுதிப்போட்டி இன்று பெர்த்தில் நடைபெற்றது. இதில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியும், பிரிஸ்பேன் ஹீட் அணியும் மோதின.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 175 ரன்கள் குவித்தது. மெக்ஸ்வீனி 41 ரன்னும், ஹேஸ்ல்லெட் 34 ரன்னும் அடித்தனர்.

பெர்த் அணி சார்பில் பெஹண்ட்ராப், கெல்லி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் 5வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லலாம் என்ற இலக்குடன் பெர்த் அணி களமிறங்கியது.

பரபரப்பாக நடைபெற்ற ஆட்டததில் பெர்த் அணி 19.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 177 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அத்துடன் 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. கேப்டன் ஆஷ்டன் டர்னர் 53 ரன்கள் அடித்தார். இறுதியில் நிக் ஹாப்சன் 7 பந்தில் 18 ரன்களும், கூப்பர் கன்னோலி 11 பந்தில் 25 ரன்னும் எடுத்து அணியின் வெற்றியை எளிதாக்கினர்.

ஆட்ட நாயகன் விருது ஆஷ்டன் டர்னருக்கும், தொடர் நாயகன் விருது மேத்யூ ஷார்ட்டுக்கும் அளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com