இலங்கை அணியில் மேலும் ஒரு வீரருக்கு கொரோனா பாதிப்பு

பதும் நிசங்காவுக்கு மாற்று வீரராக பெர்னாண்டோ அணியில் சேர்க்கப்பட்டார். இலங்கை அணியில் இதுவரை 3 வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பதும் நிசங்கா
பதும் நிசங்கா
Published on

இலங்கை-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 364 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது.

நேற்றைய 3-வது நாள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 431 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணியை விட இலங்கை அணி 67 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இலங்கை அணியில் மேலும் ஒரு வீரருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரரான பதும் நிசங்காவுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. அவருக்கு மாற்று வீரராக பெர்னாண்டோ அணியில் சேர்க்கப்பட்டார். இலங்கை அணியில் இதுவரை மேத்யூஸ், பிரவீன் ஜெயவிக்ரமா, பதும் நிசங்கா ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேத்யூஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த போது அவருக்கு பதிலாக பெர்னாண்டோ அணியில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com