இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் 366 ரன்களுக்கு பாகிஸ்தான் ஆல் அவுட்

பாகிஸ்தான் தரப்பில் கம்ரான் குலாம் 118 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜேக் லீச் 4 விக்கெட் வீழ்த்தினார்.
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் 366 ரன்களுக்கு பாகிஸ்தான் ஆல் அவுட்
Published on

முல்தான்:

இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி முல்தானில் நேற்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் கம்ரான் குலாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். அறிமுக போட்டியில் சதம் விளாசிய அவர் 118 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் 90 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 259 ரன்கள் எடுத்திருந்தது.

இன்று 2-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. இதில் ரிஸ்வான் 41 ரன்னிலும், ஆகா சல்மான் 31 ரன்னிலும் அடுத்து வந்த அமீர் ஜமால் 37 ரன், சஜித் கான் 2 ரன், நோமன் அலி 32 ரன் எடுத்து அவுட் ஆகினர். இறுதியில் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் 366 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜேக் லீச் 4 விக்கெட் வீழ்த்தினார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com