சஜித் கான் மிரட்டல் பந்து வீச்சு: 2-வது நாள் முடிவில் இங்கிலாந்து 239/6 - விக்கெட் வீடியோ வைரல்

பென் டக்கெட் 114 ரன்னில் ஆட்டம் இழந்தார். பாகிஸ்தான் தரப்பில் சஜித் கான் 4 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.
சஜித் கான் மிரட்டல் பந்து வீச்சு: 2-வது நாள் முடிவில் இங்கிலாந்து 239/6 - விக்கெட் வீடியோ வைரல்
Published on

முல்தான்:

பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி முல்தானில் நேற்று தொடங்கி நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 90 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 259 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து இன்று 2-வது நாளில் விளையாடிய பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்சில் 366 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக கம்ரான் குலாம் 118 ரன் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜேக் லீச் 4 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேக் க்ராவ்லி மற்றும் பென் டக்கெட் களம் இறங்கினர். இதில் க்ராவ்லி 27 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த போப் 29, ரூட் 34 என ஆட்டமிழந்தனர்.

ஒருபுறம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் டக்கெட் சதம் அடித்த நிலையில் 114 ரன்னில் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து களம் இறங்கிய ஹாரி புரூக் 9 ரன், பென் ஸ்டோக்ஸ் 1 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

இறுதியில் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து தனது 53 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 239 ரன்கள் எடுத்துள்ளது. ஜேமி ஸ்மித் 12 ரன், பிரைடன் கார்ஸ் 2 ரன் எடுத்து களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் தரப்பில் சஜித் கான் 4 விக்கெட் வீழ்த்தி உள்ளார். இங்கிலாந்து அணி இன்னும் 127 ரன்கள் பின்னிலையில் உள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com