297 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்: 3-ம் நாள் முடிவில் இங்கிலாந்து 36/2

2-வது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் 221 ரன்கள் எடுத்தது. இதனால் இங்கிலாந்துக்கு 297 ரன்கள் பாகிஸ்தான் இலக்கு நிர்ணயித்துள்ளது.
297 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்: 3-ம் நாள் முடிவில் இங்கிலாந்து 36/2
Published on

முல்தான்:

பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி முல்தானில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 90 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 259 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து 2-வது நாளில் விளையாடிய பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்சில் 366 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக கம்ரான் குலாம் 118 ரன் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜேக் லீச் 4 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. அதிரடியாக விளையாடிய பென் டக்கெட் சதம் அடித்த நிலையில் 114 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதனால் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட்டை இழந்து 239 ரன்கள் எடுத்தது. ஜேமி ஸ்மித் 12 ரன், பிரைடன் கார்ஸ் 2 ரன் எடுத்து களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் தரப்பில் சஜித் கான் 4 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.

இந்நிலையில் 3-வது நாள் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் 4 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 291 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் சஜித் கான் 7 விக்கெட்டுகளை அள்ளினார்.

இதனை தொடர்ந்து பாகிஸ்தான் அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. சபீக் 4, மசூத் 11, சைம் அயூப் 22, கம்ரான் 26, சகீல் 31, ரிஸ்வான் 23 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அடுத்து வந்த ஆகா சல்மான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனால் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் 221 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் பஷீர் 4 விக்கெட்டும் ஜேக் லீச் 3 விக்கெட்டும் வீத்தினர். இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு 297 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் பென் டக்கெட் 0, க்ராவ்லி 3 ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் 3-ம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 36 ரன்கள் எடுத்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com