முத்தரப்பு ஒருநாள் தொடர்: பாகிஸ்தான் அணியில் இருந்து சைம் ஆயூப் விடுவிப்பு

முத்தரப்பு தொடரில் 3 போட்டிகளில் சைம் அயூப் 21 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.
சைம் அயூப்
சைம் அயூப்
Published on: 

பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.

சைம் அயூப் விடுவிப்பு

பாகிஸ்தான் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டி முன்னேறியுள்ளது. அந்த அணியில் சைம் அயூப் மற்றும் பஹர் ஜமான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கி வருகின்றனர். பாகிஸ்தானுக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. குறிப்பாக சைம் அயூப் மோசமாக விளையாடி வருகிறார்.

இதனால் முத்தரப்பு தொடரில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சஹிப்சதா பர்ஹான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மோசமான சராசரி

இந்த முத்தரப்பு தொடரில் சைம் அயூப் 3 போட்டிகளில் 21 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இந்த வருடத்தில் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் 19 போட்டிகளில் விளயைாடியுள்ளார். சராசரி 16.55 மட்டுமே. டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 50 ரன்களுக்கு மேல் அடித்தார். இது மட்டுமே சிறப்பான ஆட்டமாகும்.

சைம் அயூப் வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com