இந்தியா போட்டி புறக்கணிப்பு... மனம் திறந்த பாகிஸ்தான் கேப்டன் சல்மான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பையில் விளையாட பாகிஸ்தான் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவுக்கு எதிராக நடைபெறவிருக்கும் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பங்கேற்காது என்று பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்தியா போட்டி புறக்கணிப்பு... மனம் திறந்த பாகிஸ்தான் கேப்டன் சல்மான்
Published on

லாகூர்:

இந்தியா மற்றும் இலங்கையில் 20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக் கோப்பை தொடர் வருகிற 7-ந்தேதி தொடங்குகிறது. பாகிஸ்தான் மோதும் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடைபெறுகின்றன.

வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினர் தாக்கப்படுவதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் இருநாடுகளுக்கும் இடையிலான உறவு மோசடைந்துள்ளது. கே.கே.ஆர். அணியில் இருந்து முஸ்தபிஜுர் ரஹ்மான் நீக்கப்பட்டார்.

இதனால் பாதுகாப்பு காரணத்தை கூறி இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க இயலாது என வங்கதேச அணி அறிவித்தது.

அத்துடன் நாங்கள் விளையாடும் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டுகோள் விடுத்தது. ஆனால் ஐசிசி அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.இதனால் வங்கதேச அணி உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

இதனையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பையில் விளையாட பாகிஸ்தான் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் பிப்ரவரி 15-ம் தேதி இந்தியாவுக்கு எதிராக நடைபெறவிருக்கும் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பங்கேற்காது என்று பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த புறக்கணிப்பு முடிவு குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் சல்மான் அலி அகாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ஆம், நிச்சயமாக நாங்கள் இலங்கைக்கு செல்வோம். ஆனால் இது எங்கள் முடிவு அல்ல. எங்களால் ஒன்றும் செய்ய முடியாது.

அரசு மற்றும் பிசிபி தலைவர் என்ன கட்டளையிடுகிறார்களோ, அதைத்தான் பின்பற்ற வேண்டும். அதன்பிறகே செல்வோம், அதைச் செய்வோம்," என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com